இளங்கோவின் எதிர்காலவியல் சிந்தனை
இரா. சித்ரா
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக்கல்லூரி சேலம் - 7
இளங்கோவின் எதிர்காலவியல் சிந்தனை
ஐம்பெருங்காப்பியங்களில் முதலில் வைத்து எண்ணப்படுவது சிலப்பதிகாரம்.
எத்திசையும் புகழ் மணக்கும் இலக்கிய அரங்குகளில், எழில் நடம் புரியும் தமிழ் அணங்காக அழகு செய்யும் அணிகலன்
பல உண்டு. அவைகளுள் ஒன்றுதான் சிலப்பதிகாரம். சோழநாட்டில் பிறந்து பாண்டிய
நாட்டில் வளர்ந்து சேரநாட்டில் முடியும் சிறந்த காப்பியம் சிலப்பதிகாரம்.
புலவர்கள் இதனைப் புலமை நுணுக்கம் மிக்க இலக்கியம் என்றும், வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்று உண்மைகளை
வண்ணமுறக்காட்டும் பொன்னேடு என்பர். தமிழர் மாண்பினை ஆராய்வோர் தமிழ்ப் பண்பின்
படப்பிடிப்பு என்பர். அரசியலறிஞர் ‘அரசியல்
நெறியின் விளக்கம்’ என்பர். தத்துவக்
கருத்துடையோர், தத்துவச்
செழுமையின் சின்னம் என்பர். இசைப்பாணர் இதன் இசை கண்டு மகிழ்வர், கூத்தர் இதனைக் கண்டு குதூகலிப்பர், இதனைப்போல இன்னும் பற்பல சிறப்புகள்
உள்ளன.
இந்நுhல் இன்பத்தை
நுகர்ந்தவர்களுள் பாரதி மிகவும் சிறந்தவர்.
""நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு""
என்று பாடியுள்ளார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்
""தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும்
சிலப்பதிகாரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளனவும் நிதம்ஓதி
உணர்ந்தின் புறுவோம்"" என்று கூறியுள்ளார்.
எதிர்நிலை பாத்திரங்கள்
சிலம்பில் சிறந்து விளங்கும் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவை அனைவராலும்
மறக்கமுடியாத பாத்திரப் படைப்புகளும் உள்ளனர். அதனாலேயே காப்பியம் வளர்ச்சியைக்
காணமுடிகின்றது.
இக்காப்பியம் தொடங்கும்போதே பின்பு அவர்கள் அடையப் போகும் துன்ப, வேதனைகளை தம்மால் காணமுடியாது என்று
மிகவும் மகிழ்ச்சயாடே மங்கல வாழ்த்து பாடல் என்று தொடங்கி மக்களை மகிழ்ச்சி அடையச்
செய்கின்றார்.
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி என்னும் மாந்தரை மையமாகக் கொண்டு
இயங்கினாலும் பல துணைநிலை பாத்திரங்களும், எதிர்நிலை
பாத்திரங்களும் உள்ளனர். மாசாத்துவான், மாநாய்கன், மாதவி, ஐயை, கவுந்தியடிகள், மாடல கோசிகாமணி போன்ற துணைமை பாத்திரங்களும்,
பல இயற்கை சின்னங்களும், சித்திராபதி, வஞ்சியத்தன் என்னும் பொற்கொல்லன் ஆகியோர்
எதிர்நிலைப் பாத்திரங்களாக செயல்படுகின்றனர் என்பதை அறியலாம்.
இயற்கை பொருள்கள்
நாளை துன்பம் நேரப்போகிறது என்பதை முன்கூட்டியே இயற்கை மீது ஏற்றிப்
பாடுகின்றார் ஆசிரியர்.
கனவு என்னும் இயற்கை பொருள்
பட்ட பதியில், படாதது
ஒருவார்த்தை
இட்டனர் ஊரார், இடுதோள் இட்டு
என்தன்மேல்
கோவலற்கு உற்றது ஒரு தீங்கு
என்று அது கேட்டுக் காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் என்று எதிர்நிலையான
கனவு ஒன்று கண்டதும் தன் கணவன் வந்து நின்றதும், கண்ணகி, கோவலன்
இருவரும் மதுரைக்குச் செல்லும் போதும், சென்ற
பின்னரும் பல இன்னல்கள், இயற்கை
சீற்றம் போன்றவையும், இருவரும் மதுரை
மாநகரை அடையும் போது அங்கு உள்ள நெடுங்கொடிகளே வாரதீர் என்று கூறுவது போன்றும்
வானவர் உரையும் மதுரையில் கண்ணகியும், கோவலனும்
காவற் காடினைச் சுற்றிச் செல்லும் போது அவர்கள் அடையப் போகின்ற துயரத்தினை
ஐயமின்றி முன்னதாகவே அறிந்த போல வண்டினம் ஒலி செய்ய, தாமும் கண்ணீர் நிறைந்து தாள்கள் நடுங்கச் சேர்ந்தன. போரிலே
வென்று வெற்றிக் கொடியாக உயர்ந்துப் பறக்கின்ற நெடுங்கொடியானது, நீவிர் இவ்வூருக்குள்ளே வாராதீர் என்பது
போல மறித்துக் கைகாட்டியபடியே பறந்தது என்றும்,
கோவலன் மூலம் காணும் எதிர்காலவியல்
கோவலன் கூறுகின்றான். காவல் வேந்தனின் பெரும் நகரில் ஒரு கீழ் மகனால் மணம்
நானும் ஐங்கூந்தலை உடையவளான இவள் நடுநடுங்கித் துயர் எய்தவும், யான் உடுத்த ஆடையும் பிறரால் கொள்ளப்பட்டு
விட, எருமைக் கடாவின்
மீது ஊர்ந்து செல்லவும் கண்டேன், அதன்
முன் ஆய்ழையாளோடும், பிறவிப்பணியை
அறுத்தோர் பெறும் நிலையினை யான் எய்தினேன். காமக் கடவுள் ஏங்கி அழுமாறு அணிதினமும்
போதி அறனோனின் முன்னிலையிலே மணிமேகலையை மாதவி அடைக்களமாக கொடுத்தனள், நனவிலே நடப்பது போல் நள்ளிருள் சூழ்ந்த
யாமத்திலே இப்படி ஒரு கனவைக் கண்டேன் அதனால் புகாரினை விட்டுவிட்டு இங்கே விரைந்து
வந்தேன் என்று தனது எதிர்காலச் சிந்தனையைக் கூறுவது.
மாதரி கண்ட தீய குறிப்புகள்
குடப்பால் உறையா; குவிஇமில்
ஏற்றின்
மடக்கண் நீர் சோரும் . . . . .
உறிநறு வெண்ணெய் உருகா, உருகும்
மறிதெறித்து ஆடா;. . . .
நான் முலை ஆயம் நடுங் குபு நின்றிரங்கும்
மாண்மணி வீழும்; வருவது என்று
உண்டு.
குடங்களிலே உறையிட்டிருந்த பால் உறையாதிருக்கின்றது.
திரண்ட திமில்களையுடைய ஆனேற்றின் அழகிய கண்களினின்றும் நீர் அழிந்து கொண்டிருக்கின்றது
என்றும், முதல் நாள்
உறியிலே எடுத்துவைத்திருந்த வெண்ணெய், உருக
வைத்தும் உருகாதிருக்கின்றது. துள்ளி விளையாடும் ஆட்டுக் குட்டிகள் ஆடவாய்
அசையாவாய்ச் சோர்ந்து கிடக்கின்றன. நான்கு காம்புகளையுடைய பசு நிரைகள், தம் உடல் நடுங்க கதருகின்றன; அவற்றின் கழுத்திலே கட்டியிருந்த மணிகள்
அற்று நிலத்திலே வீழ்கின்றன. அதனால் நமக்கு ஒரு தீங்கு வரும் என்று மாதரி தன்மகளை
நோக்கி கூறுவதாகவும்,
அரசின் தீக்கனவு
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணியின் குரல் காண்பென்-காண் எல்லா!
திசையிரு நான்கும் அதிர்ந்திடும். அன்றிக்
கதிரை இருள் விழுங்கக் காண்பென் - காண் எல்லா!
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்; இவை
கொண்பென்-காண்
நம் மன்னது செங்கோலும், வெண்குடையும்
நிலத்தின் கண் சரிந்தன; கொள்ள
வாயிலின் கண்ணே மணியானது நடுநடுங்க, இரவிலே
வானம் வில்லிடும், பகற் காலத்தில்
விண்மீன்கள் எரிந்து கீழே விழும், எட்டுத்
திசைகளும் அதிர்ந்திடும் என கோப்பெருந் தேவியானவள் கண்ட தீக்கனவும்
கருங்கண்ணும் செங்கண்ணும்
‘கள் உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும், மாதவி
செங்கணும்
உள் நிறை சுரந்து, அகத்து
ஒளித்து . . . . .’
தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப் போலக் கண்ணகியின் இடக்கண்ணும், மாதவிக்கு வலக்கண்ணும், துடிப்பதனை அவர்கள் இருவருக்கும்
ஏற்படும் நன்மை தீமைகளை விளக்குகின்றாள் இக்கனவு மூலம்.
நிறைவுரை
இவ்வாறு இளங்கோவடிகள் இயற்கையின் ஊடே நிகழும் நன்மை தீமைகளை விளக்கியுள்ளார்.
படைப்பில் வரும் கதாபாத்திரங்களை விட இயற்கையின் செயல்பாடே வலிமை உடையது எனக்
கருதுகின்றனர்.
துணை நின்றவை
1. சிலப்பதிகாரம் - புலியூர்க் கேசிகன் உரை, பாரி நிலையும், 184
பிராட்வே சென்னை 600 108
2. இலக்கியங்கள் காட்டும் சமுதாய அகிலா சிவங்கர், தாரிணி பதிப்பகம், காந்தி நகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை 600 020
0 comments:
Post a Comment