Saturday, January 2, 2016

இளங்கோவின் எதிர்காலவியல் சிந்தனை



இரா. சித்ரா
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக்கல்லூரி சேலம் - 7




இளங்கோவின் எதிர்காலவியல் சிந்தனை



ஐம்பெருங்காப்பியங்களில் முதலில் வைத்து எண்ணப்படுவது சிலப்பதிகாரம். எத்திசையும் புகழ் மணக்கும் இலக்கிய அரங்குகளில், எழில் நடம் புரியும் தமிழ் அணங்காக அழகு செய்யும் அணிகலன் பல உண்டு. அவைகளுள் ஒன்றுதான் சிலப்பதிகாரம். சோழநாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் வளர்ந்து சேரநாட்டில் முடியும் சிறந்த காப்பியம் சிலப்பதிகாரம்.
புலவர்கள் இதனைப் புலமை நுணுக்கம் மிக்க இலக்கியம் என்றும், வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்று உண்மைகளை வண்ணமுறக்காட்டும் பொன்னேடு என்பர். தமிழர் மாண்பினை ஆராய்வோர் தமிழ்ப் பண்பின் படப்பிடிப்பு என்பர். அரசியலறிஞர் அரசியல் நெறியின் விளக்கம்என்பர். தத்துவக் கருத்துடையோர், தத்துவச் செழுமையின் சின்னம் என்பர். இசைப்பாணர் இதன் இசை கண்டு மகிழ்வர், கூத்தர் இதனைக் கண்டு குதூகலிப்பர், இதனைப்போல இன்னும் பற்பல சிறப்புகள் உள்ளன.

Read more...
Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP