Friday, September 20, 2013

ஜோதிர்லதா கிரிஜா – நாவல்களில் பெண்களின் நிலை

                    கட்டுரையாளர்    மா. ஜெகதாம்பாள்,    
      முனைவர் பட்ட ஆய்வாளர்  
                    அரசு கலைக்கல்லூரி, சேலம் - 7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, 9488417411, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)
.

              ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்களின் நிலை

                மக்களின் வாழ்வை பிரிதிபலிக்கும் சமகால இலக்கியங்களுள் நாவலும் ஒன்று. எங்குப் பார்த்தாலும் பெண்களின் சிக்கல்கள் பெரிதாகப் பரிணமித்துக் கொண்டு வருகின்றன. நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும், பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமில்லை. ஆங்காங்கே பெண் சாதனையாளர்கள் வானத்தில் காட்சியளிக்கும் நட்சத்திரங்களைப் போல் ஒளிவீசினாலும், (பிரகாசித்தாலும்) சமூகம், குடும்பம் இவற்றால் எவ்வாறெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் ஜோதிர்லதா கிரிஜாவின் நாவல்கள் பல வகையில் ஆய்வுக்கு எடுத்தாளப்படுகின்றன. அப்படைப்புகளில் காணப்படும் பெண்களின் நிலை பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.  

பெரியபுராணத்தில் இசைக்கலை

கட்டுரையாளர் து.பிரபா,
 முனைவர் பட்ட ஆய்வாளர்,
              அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
                சேலம் - 7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, 9488417411, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)
.

                                      பெரியபுராணத்தில் இசைக்கலை

                ஆதிகாலத்தில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது தங்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும் ஏற்பாடு செய்து கொள்ளத் தெரியாமல் மிருகம் போல அலைந்து திரிந்தபோது கொள்ளத் தெரியாமல் மிருகம் அவன் அறிந்திருந்தது ஓசை  ஒன்றே. மொழிக்கு உருவம் காணும் முன்பே அன்றைய மனிதன் பெய்கிற மழையில், இடிக்கிற வானத்தில், மரங்களின் அசைவில், பறவைகளின் ஒலியில் மிருகங்களின் குரலில் எழுந்த ஓசையைக் கண்டான். பின்னர் நாகரிக வளர்ச்சியடைந்த பிறகு மனிதன் தன்னுடைய அறிவினாலும் சிந்தனையினாலும் இசையாக உருவகப்படுத்தினான்.

அறநூல்களில் பொருளறிவியல்

கட்டுரையாளர் பா.மணிவண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசுகலைக்கல்லூரி,
சேலம்7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)
    
அறநூல்களில் பொருளறிவியல்

                தமிழர்கள் மருத்துவம், பொறியியல், உயிரியல், வானியல், நிலவியல் போன்ற பல்வேறு அறிவியல் சிந்தனைகளைக் கொண்டிருந்ததையும், அவற்றை இலக்கியங்களில் பதிவு செய்துள்ளதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கில் அறத்தை வலியுறுத்த எழுந்த அற நூல்களில் பொருளறிவியல் பற்றியும், அது தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டதையும் ஆராயும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது

Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP