தமிழ் நாவல்களில் முதியோர் சிக்கல்
தமிழ் நாவல்களில் முதியோர் சிக்கல்
கட்டுரையாளர் இரா.செந்தமிழ்ச்செல்வி
முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசுகலைக்கல்லூரி,சேலம்–7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)
முன்னுரை
முதுமையானது அறிவியலால் வெல்லப்படாத ஒரு இயற்கை நியதி. இறப்புக்கு ஒரு முன்னோடியாக அமையக் கூடியது முதுமை. முதுமை பற்றிய சிந்தனை இன்று அல்லது நேற்று தொடங்கியது அன்று. இது ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறை ஆகும். ஹிப்போகிரேட்ஸ் , ஜெனோபேன் , செனெகா , புளுடார்க் , முதலிய தத்துவ மேதைகளும் கவிஞர்களும் முதுமையைப் பற்றிச் சிந்தித்துள்ளனர்.